மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
சமீபத்தில் மறைந்த இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் இயக்கிய படம் ராஜா. குடும்ப ஹீரோவாக இருந்த சிவாஜியை கமர்ஷியல் ஹீரோவாக்கிய படம். ஜானி மேரா நாம் என்ற இந்திப் படத்தின் ரீமேக். கே.பாலாஜி தயாரித்தார்.
சிவாஜியுடன் ஜெயலலிதா, எஸ்.வி.ரங்காராவ், கே.பாலாஜி, சந்திரபாபு, பண்டரிபாய், மனோகர் உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஏ.எல்.நாராயணன் வசனம் எழுதியிருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.
"கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனாள் கண்ணால பார்த்து துடிப்பது நானா...", "இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு...", "நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்திருந்தேன்" போன்ற இனிய பாடல்களை கொண்ட படம்.
இந்தப் படம் 46 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளிவருகிறது. படத்தை டிஜிட்டல் தரத்துக்கு மாற்றி நவீன தொழில் நுட்பத்தில் ஒலிப்பதிவை மேப்படுத்தி சினிமாஸ்கோப்பாக வெளிவருகிறது. ஸ்ரீ சாந்தி நாராயணா பிக்சர்ஸ் வெளியிடுகிறது. வருகிற 27ந் தேதி வெளிவருகிறது.