ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கவுதம் கார்த்திக் நடித்த 'இவன் தந்திரன்' படத்தை இயக்கி தயாரித்த ஆர்.கண்ணன், தற்போது இயக்கி வரும் படம் 'பூமராங்'. அதர்வா கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
பூமராங் படத்தில் அதர்வா வித்தியாசமான கெட்-அப்பில் நடிக்கிறார் என தகவல் வெளியானது. இந்தப்படத்தில் ஷங்கரின் 'ஐ' பட வில்லன்களில் ஒருவராக நடித்த உபேன் பட்டேல் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். இப்போது இந்த தகவலை ஆர்.கண்ணன் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
'ஐ' படத்தில் நடித்த உபேன் பட்டேல் தான் வில்லனாக நடிக்கிறார். அதர்வா, உபேன் பட்டேல் இருவரது பிட்னெஸ் மற்றும் இவர்கள் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் 'பூமராங்' படத்தில் வேற லெவலில் இருக்கும்'' என்று கூறியுள்ளார் கண்ணன்.
சினிமா ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டபோது இவருடைய கால்ஷீட்டுக்காகத் தான் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் சிறப்பு அனுமதி கேட்டார் ஆர்.கண்ணன். கவுன்சில் அனுமதி தரவில்லை. எனவே உபேன் பட்டேலிடம் நிலைமையை விளக்கி அடுத்த மாதம் முதல் கால்ஷீட் வாங்கியிருக்கிறார்.