ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தியத் திரையுலகில் கடந்த வருடம் வெளிவந்த 'பாகுபலி 2' படம் சரித்திர சாதனையைப் படைத்தது. இப்படத்தின் வசூலும், வரவேற்பும் எதிர்பார்க்கப்பபட்டதை விடவும் மிக அதிகமாக இருந்தது.
கடந்த வருடக் கடைசியில் ஜப்பானில் வெளிவந்த இந்தப் படம் 100 நாட்கள் ஓடி, 13 மில்லியன் டாலர்களையும் வசூலித்தது. ஜப்பான் நாட்டில் வசூல் ரீதியாக மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள இந்தியப் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
அது மட்டுமல்ல இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள், மகிழ்மதி என்ற நாட்டுப் பெயர், படம் சம்பந்தப்பட்ட காமிக்ஸ் என ஜப்பான் ரசிகர்களை இந்தப் படம் வேறு ஒரு தளத்தில் ரசிக்க வைத்துள்ளது.
அதனால், 'பாகுபலி' குழுவினர் விரைவில் ஜப்பான் சென்று ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்களாம். இயக்குனர் ராஜமௌலி படத்தில் நடித்துள்ள சில நட்சத்திரங்கள் என பலரும் செல்ல உள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ரசிகர்களை விடவும் ஜப்பான் ரசிகர்கள் படத்தை மிகவும் சுவாரசியமாக ரசித்துப் பார்த்ததைக் கேள்விப்பட்ட இயக்குனர் ராஜமௌலி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளாராம்.