மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
ரஜினி விரைவில் அரசியலில் குதிக்கப்போகிறார். ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகின்றன. நேற்று சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் கூட ரஜினி மக்கள் மன்றத்தினர் கலந்து கொண்டனர். விரைவில் கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை அறிவிக்க இருக்கிறார்.
பொதுவாக ரஜினி படங்கள் வெற்றி பெறும்போதும், அவர் புதிய படங்கள் தொடங்கும்போதும், அல்லது அவருக்கு உடல்நலக்குறைவு மாதிரியான பிரச்னைகள் வரும்போதும் அவரது மனைவி லதா திருப்பதி கோவிலுக்கு சென்று வழிபடுவார்.
தற்போது ரஜினி தமிழ்நாட்டு அரசியலில் குதிக்க இருக்கிற நேரத்தில் அவரது அரசியல் பயணம் வெற்ற பெறவும், தமிழ்நாட்டின் நன்மை மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு வேண்டியும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் யாகம் நடத்தினார்.
"லதா ரஜினி நடத்திய யாகம் மிகவும் சக்தி வாய்ந்தது. நினைத்த காரியத்தை வெற்றிகரமாக நடத்தி தரக்கூடியது" என்று கோவில் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.