ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பல நடிகைகளுடன் விஜய் சேதுபதி நடித்தாலும், அவர்களில் ஒரு சிலருக்கே அவர் மீண்டும் தன்னுடன் ஜோடியாக நடிக்க சிபாரிசு செய்கிறார். காயத்ரி, ரம்யா நம்பீசன் இருவருக்கும் அடிக்கடி சிபாரிசு செய்து வந்தார் விஜய்சேதுபதி. தற்போது விஜய்சேதுபதியின் சிபாரிசு கரங்கள் மடோனா செபாஸ்டியனை நோக்கி நீள ஆரம்பித்துள்ளது.
பிரேமம் படத்தின் மூலம் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான மடோனா செபாஸ்டியன், தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, கே.வி. ஆனந்த் இயக்கிய கவண் படத்திலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார்.
தற்போது ஜுங்கா படத்தின் மூலம் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளார் மடோனா செபாஸ்டியன். விஜய் சேதுபதி தயாரிப்பில், கோகுல் இயக்கிவரும் இந்தப் படத்தில், வெளிநாட்டில் வசிக்கும் டானாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. வனமகன் சயிஷா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இன்னொரு ஹீரோயினாக மடோனா செபாஸ்டியனை உள்ளே கொண்டு வந்த சில நாட்களிலேயே அவரும் ஜார்ஜியா சென்றிருக்கிறார்.