எல்லோருக்கும் மரண தண்டனை : வரலட்சுமி | இரும்புத்திரை ரிலீஸில் குழப்பம்? | காட்டேரியில் 4 கதாநாயகிகள் | துல்கருக்கு ஜோடியாக 4 ஹீரோயின்கள்? | காலா ஜூன் மாதத்துக்கு தள்ளிப்போனது ஏன்? | கரு படத்துக்கு சுப்ரீம் கோர்ட் தடை... ஏன்? | பக்ருவுக்கு மீண்டும் ஒரு கின்னஸ் விருது | சித்திக்கும் ஏப்ரல் சென்டிமென்ட்டும் | மேக்கப் மேன் பிறந்தநாளுக்கு கார் பரிசளித்த ஜாக்குலின் பெர்னாண்டஸ் | விரைவில் வெளிவர இருக்கும் படங்கள் |
'இன்று நேற்று நாளை' படத்தின் இயக்குநர் ரவிகுமார், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவிருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். '24 AM STUDIOS' நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.
இந்த படத்திற்கான நடிகர், நடிகை தேர்வு நடைபெற்றுவரும் நிலையில் காமெடியன் கேரக்டருக்கு சதீஷை சிபாரிசு செய்துள்ளார் சிவகார்த்திகேயன். சதீஷை பயன்படுத்த இயக்குநர் ரவிகுமாருக்கு விருப்பமில்லை. தன்னுடைய முதல் படமான 'இன்று நேற்று நாளை' படத்தில் நடித்த கருணாகரன் தான் நடிக்க வேண்டும் என்பதில் ரவிகுமார் உறுதியாக இருந்திருக்கிறார்.
அதனால், கருணாகரனே காமெடி ரோல் பண்ண உள்ளார். முதன்முறையாக சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பணியாற்றுகிறார் கருணாகரன்.
இந்த விவகாரம் தொடர்பாக சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் ரவிகுமாருக்கும் இடையில் ஏற்பட்ட சின்ன புகைச்சல் இன்னும் அணையவில்லை என்பதுதான் லேட்டஸ்ட் நியூஸ்.