ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
விஜயகாந்த் அரசியல்வாதியாகிவிட்டதால் அவரது சினிமா சாதனைகள் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது. மதுரையிலிருந்து சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தவரை சினிமாவுக்கு ஒரு ரஜினி போதும் என்று விரட்டியடித்தது சென்னை. அந்த வெறியில் இன்னொரு காந்தாக ஜெயித்துக் காட்டுகிறேன் என்று விஜயகாந்த் என்று பெயர் மாற்றி பெரும் போராட்டத்திற்கு பிறகு சினிமாவில் அறிமுகமானார். சவால் விட்டது போல் ரஜினியை விட அதிக படங்களில் நடித்தும் விட்டார். அவரது சாதனைகளில் முக்கியமானது 1984ம் ஆண்டு மட்டும் 18 படங்களில் நடித்தது சாதனை. அதாவது சராசரியாக 20 நாட்களுக்கு ஒரு படம்.
ஜனவரி 1, குடும்பம், வைதேகி காத்திருந்தாள், இது எங்க பூமி, சத்தியம் நீயே, நாளை உனது நாள், சபாஷ், வீட்டுக்கு ஒரு கண்ணகி, மாமன் மச்சான், நல்ல நாள், வெள்ளைப்புறா ஒன்று, குழந்தை யேசு, நூறாவது நாள், வேங்கையின் மைந்தன், வெற்றி, தீர்ப்பு என் கையில், மெட்ராஸ் வாத்தியார், மதுரை சூரன் ஆகிய படங்கள்தான் அவர் ஒரே ஆண்டில் நடித்தது.
இதில் வைதேகி காத்திருந்தாள், நூறாவது நாள் வெள்ளிவிழா படங்கள். வெற்றி, வீட்டுக்கு ஒரு கண்ணகி, சபாஷ், இது எங்க பூமி, குடும்பம் ஆகிய படங்களில் அவரது கேரக்டர் பெயர் விஜய்.