ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திலீப், சித்தார்த் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள 'கம்மார சம்பவம் பட டீசர் நேற்று வெளியாகியுள்ளது. இந்த டீசரை பார்த்தவர்கள், அதில் திலீப், சித்தார்த் இருவரின் கெட்டப்புகளையும் கேரக்டர்களையும் தாண்டி பாபி சிம்ஹாவின் சர்ப்ரைஸ் என்ட்ரியை கண்டு ஆச்சர்யம் அடைந்துள்ளனர். சித்தார்த்திற்கு மலையாளத்தில் இதுதான் முதல் படம் என்றாலும், பாபி சிம்ஹா மலையாளத்தில் ஏற்கனவே ஒன்றிரண்டு படங்களில் நடித்தவர் தான்.
நேரம் படத்தில் மலையாளத்திலும் 'வட்டி ராஜாவாக நடித்த பாபி சிம்ஹா, அதன்பின்னர் 'பிவேர் ஆப் டாக்ஸ்' என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். அடுத்ததாக ஒரு வடக்கன் செல்பி' படத்தில் சில வினாடிகளே வந்து செல்லும் கேரக்டரில் நட்புக்காக நடித்துக்கொடுத்தார்.
ஜிகர்தண்டா படத்தில் சித்தார்த்துடன் இணைந்து அவருக்கு வில்லனாக நடித்த பாபி சிம்ஹா, இந்தப்படத்தில் சித்தார்த்துக்கு வில்லனாகத் தான் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.