'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் | கதை நாயகன் ஆன இயக்குனர் ஜெகன் | கராத்தே ஹுசைனிக்கு தமிழக அரசு 5 லட்சம் உதவி | பிளாஷ்பேக்: மோசமான தோல்வியை சந்தித்த ரஜினி படம் | பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்த நடிகை | நடிகர் விஸ்வக் சென் வீட்டில் வைர நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் திருட்டு |
தெலுங்குத் திரையுலகத்தின் தனித்துவமான நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான மறைந்த என்டிஆர் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படத்தை அவருடைய மகன் பாலகிருஷ்ணா தயாரித்து, என்டிஆர் ஆகவும் நடிக்கிறார். இப்படத்தின் துவக்க விழா, இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு படத்தைத் துவக்கி வைத்தார்.
படத்தில் இடம் பெறும் படப்பிடிப்பு ஒன்றை எம்ஜிஆர் கிளாப் அடித்து துவக்கி வைப்பது போன்ற காட்சி இன்றைய துவக்க விழாவில் படமாக்கப்பட்டது. அதில் எம்ஜிஆர் ஆக நடிப்பவரின் தோற்றம் கிட்டத்தட்ட எம்ஜிஆர் போலவே உள்ளது. படத்தில் ஓரிரு காட்சிகளில் மட்டும் எம்ஜிஆர் வருவாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.
படத்தை எவ்வளவு சீக்கிரம் எடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் எடுத்து முடித்து வரும் தசரா பண்டிகை சமயத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். படத்தில் என்டிஆர் பற்றி மக்களுக்குத் தெரியாத சில விஷயங்களையும் இணைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு, ஹிந்தியில் உருவாக உள்ள இந்தப் படத்தை பின்னர் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.