விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகள் பேசப்படுகிறது. ஆனால் உலகின் பொது மொழி மவுனம். அந்த மவுன மொழியில் தயாராகி உள்ளது கார்த்திக் சுப்பராஜின் மெர்குரி. உலகின் அனைத்து மொழிகளிலும் என்ற வாசகத்துடனேயே ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிது.
மவுன படங்களின் காலத்திற்கு பிறகு கமல் நடித்த பேசும்படம் தான் மவுனப் படம். அதன் பிறகு தற்போது மெர்குரி மவுனப்படமாக தயாராகி உள்ளது. பிரபுதேவா, சனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், அனிஷ் பத்மன், ரம்யா நம்பீசன், இந்துஜா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார், சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ஞ் நிறுவனமே தயாரித்துள்ளது.
ஒரு பாழடைந்த பழைய தொழிலற்சாலைக்குள் சிலர் மாட்டிக் கொண்டு தவிக்கும் வழக்கமான படம் தான் என்றாலும் படத்தில் யாரும் வசனம் பேச மாட்டார்கள், சந்தோஷ் நாராயணனின் இசை மட்டுமே பேச இருக்கிறது.
பிரபு தேவா ஹீரோ என்றாலும் அவருக்கு ஜோடி இல்லை. அனைத்து கேரக்டர்களுமே மர்ம தொழிற்சாலைக்குள் மாட்டிக் கொள்ளும் வெவ்வேறு மனிதர்களாக நடித்திருக்கிறார்கள். ஹாலிவுட்டில் இதுபோன்ற படங்கள் சில வெளிவந்திருந்தாலும், தமிழில் இதுவே முதல் படமாகும்.