மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பாகுபலி-2 படத்திற்கு பிறகு ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிக்கும் படத்தை ராஜமவுலி இயக்குவதாக செய்திகள் வெளியாகி வந்தன. டிவிவி எண்டர் டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் அப்படம் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாராகயிருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது தனது புதிய படம் குறித்த ஒரு தகவலை வீடியோவில் வெளியிட்டுள்ளார் ராஜமவுலி. அதில், தனது புதிய படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா நடிப்பதை உறுதிப்படுத்தியிருப்பவர், தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்த படத்தை டிவிவி எண்டர்டெய்ன் மென்ட் நிறுவனம் தயாரிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மூன்று மொழிப்படம் என்பதால் மற்ற மொழிகளில் பிரபலமான நடிகர், நடிகைகளும் நடிப்பதாக கூறியிருப்பவர், இந்த படத்திற்கு இன்னும் டைட்டீல் முடிவு செய்யவில்லை. ஆனால், ஜூனியர் என்டிஆர், ராம்சரண் என்ற இரண்டு ஹீரோக்களின் முதல் எழுத்து, மற்றும் எனது பெயரின் முதல் எழுத்தையும் சேர்த்து தற்காலிகமாக RRR என்று டைட்டீல் வைத்துள்ளேன். ஆனால் இது படத்தின் டைட்டீல் அல்ல என்றும் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.