ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

வாசல், ராஜஸ்தான், சார்லி சாப்ளின், புதுக்கோட்டையிலிருந்து சரவணன், தேவதையை கண்டேன், கிழக்கு கடற்கரைசாலை உள்பட தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் எடிட்டராக பணியாற்றிவர் அனில் மல்நாட். காமெடி படங்களுக்கு பிரபலமானவர். சித்தாரா என்ற தெலுங்கு படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார்.
66 வயதாகும் அனில் மல்நாட், முதுமை காரணமாக சினிமாவிலிருந்து விலகி சென்னை குரோம்பேட்டையில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அனில் மல்நாட்க்கு நேற்று முன்தினம் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினார்கள்.