ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஏ.ஆர்.முருகதாஸ் உடன் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள 'விஜய்-62' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது ஸ்டிரைக் நடைபெற்று வருவதால் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது.
'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். படப்பிடிப்பு தடைபட்டிருக்கும் இந்த நேரத்தில் படத்திற்கான அனைத்துப் பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து வாங்கிவிட திட்டமிட்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இந்நிலையில் படத்தில் இடம்பெறும் விஜய்க்கான அறிமுகப் பாடலை பாலிவுட்டின் பிரபல பின்னணி பாடகரான விபின் அனேஜாவை பாட வைத்து பதிவு செய்துள்ளார். ஏற்கெனவே ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிகளில் ஹிந்தி பாடல்களை பாடி வரும் விபின் அனேஜா, இதுவரை தமிழ்ப் பாடல்களை பாடியதில்லை.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் நடிக்கும் படத்திற்காக பாடுவதன் மூலம் தமிழில் பாடகராக அறிமுகமாகிறார் விபின் அனேஜா.