Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடிமையாகவே இருப்பதா : தயாரிப்பாளர் ஆவேசம்

13 மார், 2018 - 15:41 IST
எழுத்தின் அளவு:
Producer-SR-Prabhu-replied-why-Strike-going-in-Tamil-Film-Industry?

சென்னை: திரைப்பட வெளியீடு நிறுத்தம் சம்பந்தமாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் கருத்து இதோ...

தியேட்டர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து புரொஜக்டர்கள் மூலம் படங்கள் ஒளிபரப்பப்பட்ட வரை குளறுபடி இல்லை. டிக்கெட் விலையில் குறிப்பிட்ட பங்கு, அதனுடன் சேர்த்து விளம்பரம், பார்க்கிங், கேன்டீன் வருவாயும் கிடைத்தது.

அனலாக் பார்மட் முறை
ஒரு விநியோகஸ்தர், அவர் வெளியிடும் தியேட்டர் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு பிரின்ட் வாங்கி வெளியிடுவார். அந்த செலவு, விநியோக உரிமத்துடன் கூடுதலாக ஒரு பிரின்ட்டிற்கு சுமார் ரூ.40,000 ஆக இருந்தது. தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும் இதை பிரித்து ஏற்றுக்கொள்வர்.

ஒரு கட்டத்தில் பிலிம் விலை அதிகரிக்க, ஒரு பிரின்ட் ரூ.50,000-ஐ தாண்ட ஆரம்பித்தது, 100 தியேட்டரில் ஒரு படத்தை வெளியிட ரூ.50 லட்சம் வரை செலவானது. .

வந்தது டிஜிட்டல்
இந்நிலையில் டிஜிட்டல் புரொஜக்சன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ஒரு பிரின்ட்டிற்கு ரூ.25,000 மட்டுமே செலவானது. தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் டிஜிட்டலை விரும்ப ஆரம்பித்தனர். சினிமா தயாரிப்பு செலவு குறைந்து நிறைய தயாரிப்பாளர்கள் உருவானார்கள்.

ஏன் போராட்டம்?
தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர் ஆகியோரின் அறியாமை, சில டிஜிட்டல் நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டது. இந்த 10 ஆண்டில் சுமார் ரூ.1500 கோடிகளை முதலீடு செய்தும், 90 சதவீத தியேட்டர்கள் இன்று சொந்த புரொஜக்டர் இல்லாமல், காலம்காலமாக சம்பாதித்த விளம்பர வருவாயையும் இழந்து உள்ளனர்.

விபிஎப்.,
டிஜிட்டல் உபகரணங்களை தியேட்டர்களில் ஏற்படுத்தும் செலவுகளை குறைக்க திரைதுறையினர் ஒரு வழி கண்டனர். அப்பொழுது உருவானது தான் விபிஎப் (Visual Projection Fee) முறை. அதாவது இந்த புரொஜக்டர் மற்றும் சர்வர் செலவை, டிஜிட்டல் நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டு, ஒரு படத்திற்கு சுமார் ரூ.20,000 வீதம் 5 ஆண்டுகளுக்கு படம் வெளியிடுபவரிடம் பெற்றுக்கொள்வது எனவும், செலவுகளை மீட்டெடுத்த பின்னர் புரொஜக்டர் அந்த தியேட்டருக்கு சொந்தம் எனவும், டிஜிட்டல் நிறுவனம், அதற்கு பின் சர்வீஸ் தொகை மட்டும் பெற்றுக்கொள்வது எனவும் உலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த முறையால் உலகம் முழுக்க 2018-க்குப் பின் விபிஎப் இருக்காது.

இந்தியாவிலும் இந்நேரம் புரொஜக்டர் சொந்தம் ஆகி இருக்க வேண்டுமே என கேட்டபோது, ஒப்பந்தங்கள் அனைத்தும் சேவைக்கானது. உங்களுக்கு புரொஜக்டர் சொந்தம் இல்லை என்றார்கள்.

தொழில்நுட்ப மாற்றம் நடைபெற தயாரிப்பாளர் / விநியோகஸ்தர் முதலீடு செய்தது இன்று திரை துறையினர் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அடிமையாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. போராடுவதே நம் கடமை ஆகட்டும், அதற்கு... காலம் பதில் சொல்லட்டும்!

இவ்வாறு எஸ்.ஆர்.பிரபு ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி, கமலுக்கு...! - ஒரு தயாரிப்பாளரின் குமுறல்ரஜினி, கமலுக்கு...! - ஒரு ... விவசாயம் செய்ய விரும்பும் சிவகார்த்திகேயன் விவசாயம் செய்ய விரும்பும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Pettikadai
  • பெட்டிக்கடை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
  Tamil New Film Ispet rajavum idhaya raniyum
  Tamil New Film Viswasam
  • விஸ்வாசம்
  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :சிவா
  Tamil New Film Neeya 2
  • நீயா 2
  • நடிகர் : ஜெய்
  • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
  • இயக்குனர் :எல்.சுரேஷ்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in