ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் படம் வர்மா. தெலுங்கில் வெளியாகி ஹிட்டடித்த இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் தேசிய விருது இயக்குனர் பாலா. இந்த படத்திற்காக தனது படங்களில் நடிக்கும் எல்லா ஹீரோக்களின் கெட்டப்பையும் மாற்றுவது போலவே தாடி, மீசை, ஹேர்ஸ்டைல் என்று இப்போது வர்மா படத்திற்காக துருவ் விக்ரமையும் வித்தியாசமான தோற்றத்திற்கு மாற்றியிருக்கிறார் பாலா. அந்த போட்டோக்களை விக்ரம் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கினார்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை நேபாளத்தில் உள்ள காட்மண்டுவில் மார்ச் 1-ந்தேதி முதல் தொடங்கியது. அங்குள்ள அழகிய லொகேசன்களில் படப்பிடிப்பு நடத்திய பாலா, நேற்றோடு முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டார். இதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மீண்டும் நேபாளத்திலேயே நடைபெறுகிறதா? இல்லை வேறு லொகேசனுக்கு இடம்பெயறுகிறார்களா? என்பது தெரியவில்லை.