ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமாவில் சார்லி சாப்ளின் உள்பட சில படங்களில் நாயகியாக நடித்தவர் காயத்ரி ரகுராம். பிரபல டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் மகளான இவர் பல படங்களில் நடன மாஸ்டராகவும் பணியாற்றி வருகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலியுடன் சேர்ந்து கொண்டு ஓவியாவுக்கு எதிராக செயல்பட்டு வந்தார். இதனால் அப்போதில் இருந்தே ஓவியாவின் ரசிகர்கள் காயத்ரி ரகுராம், ஜூலி ஆகிய இருவரையுமே திட்டித்தீர்த்து வந்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து பல மாதங்களான பிறகும் ரசிகர்கள் சிலர், காயத்ரி ரகுராமை திட்டுவதை வழக்கமாகக்கொண்டு வருகிறார்கள். இதனால் செம டென்சனான காயத்ரி ரகுராம், தனது டுவிட்டரில் ஒரு செய்தி பதிவிட்டுள்ளார்.
அதில், சமூக வலைதளங்களில் கிண்டலடிப்பது, கெட்ட வார்த்தை பயன்படுத்தி திட்டுவது போன்றவைகளை இன்றே முடிவுக்கு வர வேண்டும். இல்லையென்றால், போலீஸில் புகார்செய்து உங்களைக் கண்டுபிடிப்பேன். இனிமேலும் யாரேனும் என்னைப்பற்றியோ அல்லது ஜூலியைப்பற்றியோ கெட்ட வார்த்தைகளால் திட்டினால், அவர்கள் மீது சைபர் கிரைமில் புகார் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். அது தனி நபராக இருந்தாலும் சரி, நிறுவனமாக இருந்தாலும் சரி, கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.