ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
லுலு கிரியேஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.சுல்பிகர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'வெற்றிமாறன்'. அபிசரவணன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில், கதாநாயகியாக புதுமுகம் வினோலியா அறிமுகமாகிறார். புதுமுகம் மனோ இயக்கியுள்ளார். தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி, கிரேன் மனோகர், ஜெயமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குணசேகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டேவிட் கிறிஸ்டோபர் இசையமைத்துள்ளார். படம் பற்றி இயக்குனர் மனோ கூறியதாவது:
இயற்கையின் படைப்பில் காதல் இயல்பான ஒன்று. ஆனால் எப்போதுமே சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் ஆகிவிட்டது. இதனால் பலர் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சிலர் பலியாகவும் செய்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட ஒருவர் உயிர் தப்பி, தனது நிலைக்கு காரணமானவர்களை பழிவாங்க கிளம்பினால் என்ன ஆகும் என்பதுதான் படத்தின் கதை. ஹாரர் கலந்து வித்தியாசமான முறையில் உருவாக்கியுள்ளோம். குறிப்பாக பழிவாங்கும் முறையில் நிறைய உத்திகளை கையாண்டுள்ளோம். அவை ஹைலைட்டான அம்சமாக இருக்கும் என்கிறார் மனோ.