ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
இயக்குனர் ஹரியின் உதவியாளர் சஜோ சுந்தர் தமிழ், இந்தியில் இயக்கி உள்ள படம் எக்ஸ் வீடியோ. புதுமுகங்கள் அஜய்ராஜ், நிஜய், ஆக்ருதி சிங் நடித்துள்ளனர். வின்செண்ட் அமல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜோஹன் இசை அமைத்துள்ளார்.
"எக்ஸ் வீடியோ என்று தலைப்பு வைத்துள்ளதால் இது ஆபாச படம் அல்ல. படத்தை பார்த்துவிட்டு தணிக்கை குழுவினர் பாராட்டினார்கள்" என்கிறார் இயக்குனர் சஜோ சுந்தர். அவர் மேலும் கூறியதாவது:
எக்ஸ் வீடியோஸ் என்பது ஆபாச இணையதளம் என்று நினைத்து விட வேண்டாம். இது உலகெங்கும் பரவிக் கிடக்கும் ஆபாச இணைய தளங்கள் பற்றிப் பேசுகிற படம். அப்படிப்பட்ட இணைய தளங்களின் பெயரில் உலகளாவிய மாபியா கும்பல் செய்யும் அநியாயங்களைச் சொல்கிற படம். ஒவ்வொரு தனி மனிதனின் சுதந்திரத்தில் ஊடுருவி அவனது நிம்மதியைக் குலைக்கும் ஆபத்தைச் சொல்கிற படம். இன்று பரவி இருக்கிற செல்பி மோகம் எந்தளவுக்கு விபரீதமானது என்று தெளிவுபடுத்துகிறது கதை. காதலர்கள், தம்பதிகள் தங்களுக்குள் உணர்ச்சி வேகத்தில் எடுத்துக் கொள்ளும் வீடியோக்கள் எந்தளவுக்கு அபாயகரமானவை என்று படம் எச்சரிக்கிறது.
ஒரு ரகசியம் கேமராவில் பதிவு செய்யப்பட்டுவிட்டால் அது ரகசியம் இல்லை. அதை எவ்வளவு தான் மறைத்து வைத்துக் காப்பாற்றினாலும் ஒரு நாள் அது யார் மூலமாவது வெளி உலகத்துக்கு வந்தே தீரும். ஆபாச இணைய தளங்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும், அதனால் உண்டாகும் சமூகச் சிக்கலையும் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தான் இப்படம் உருவாகியிருக்கிறது. படத்தை பார்த்துவிட்டு தணிக்கை குழு உறுப்பினர் நடிகை கவுதமி உள்ளிட்ட அனைவருமே பாராட்டினார்கள் என்கிறார் சஜோ சுந்தர்.