ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹிந்தித் திரையுலகில் விரல் விட்டு எண்ணக் கூடிய யதார்த்த நடிகர்களில் ஒருவர் நானா படேகர். பல சிறந்த படங்களில் நடித்து விமர்சகர்களையும், ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர்.
பாரதிராஜா இயக்கத்தில் 2008ம் ஆண்டு வெளிவந்த 'பொம்மலாட்டம்' படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். சுமார் 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் 'காலா' படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
இந்தப்படத்தின் ஹிந்தி, தமிழ் டப்பிங்கை நானா படேகர் இன்று முடித்துள்ளார். தமிழிலும் நானே பேசுகிறேன் எனச் சொல்லி அவர் சொந்தக் குரலில் பேசியிருக்கிறார். படம் முழுவதும் மும்பையில் நடப்பதால் தமிழ் உச்சரிப்பில் ஹிந்தி வாடை அடித்தாலும் அது யதார்த்தமாகத்தான் இருக்கப் போகிறது.
'கபாலி' படத்தில் ரஜினிக்கு வில்லனாக பொருத்தமான நடிகர் நடிக்காததை குறையாகப் பார்த்தவர்களுக்கு 'காலா' நானா படேகர் மிரட்டலான வில்லனாகவே இருப்பார் என்கிறார்கள்.