அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா |
இதுவரை நான்கு படங்களில் மம்முட்டியுடன் ஜோடியாக நடித்துள்ளார் நயன்தாரா. இதில் கடைசியாக வெளியான இரண்டு படங்களில் பாஸ்கர் தி ராஸ்கல் படம் ஹிட்டானது நான்காவதாக இணைந்து நடித்த புதிய நியமம் படம் அவ்வளவாக பேசப்படவில்லை.. இந்தநிலையில் ஐந்தாவதாக ஒரு படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
ஆனால் இந்தமுறை மலையாளத்தில் அல்ல.. தெலுங்கில்.. ஆம். மறைந்த ஆந்திர முதல்வரான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறை ஒட்டி தயாராகும் யாத்ரா என்கிற படத்தில் ஒய்.எஸ்.ஆர் கேரக்டரில் நடிக்க இருக்கிறார் மம்முட்டி.
இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனராம். அவரும் ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது. தெலுங்கு இயக்குனரான மஹி ராகவ் என்பவர் இந்தப்படத்தை இயக்கவுள்ளார்.