ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. அவர், நடிகர்கள் அஜித், விஜய், விக்ரம் என அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்து விட்டார். மூத்த நடிகர் கமலுடனும் கூட நடத்து விட்டார். ஆனால், அவருக்கு நடிகர் ரஜினியுடன் இணைந்து நடக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
எப்படியாவது நடிகர் ரஜினியுடன் சேர்ந்து நடித்து விடமாட்டோமா என காத்துக் கிடைக்கும் த்ரிஷா, நடிகர் ரஜினியை வைத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புது படத்தில், எப்படியாவது வாய்ப்பு பெற்று, தனது கனவான ரஜினியுடன் ஜோடி சேரும் வாய்ப்பை பெற்று விட வேண்டும் என்று, கங்கணம் கட்டி செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க, நடிகைகள் த்ரிஷா, அனுஷ்கா, நயன்தாரா போன்றோர் பெயரை, கார்த்திக் சுப்புராஜ் பரிந்துரைத்திருப்பதாகவும், அதில் நயன்தாரா அல்லது அனுஷ்கா ஆகிய இருவரில் ஒருவரை தேர்வு செய்யலாம் என தயாரிப்பாளர் கூறியுள்ளதாகவும் கூறப்படுவதால், வாய்ப்பு பறிபோய்விடுமோ என்ற கலக்கத்தில் நடிகை த்ரிஷா இருப்பதாக தகவல் பரவி உள்ளது.
'ஜோடியாக இல்லாவிட்டாலும், ஒரு அழுத்தமான கதாபாத்திரம் கிடைத்தால் கூட நடிக்க அவர் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.