ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருமணம், விவாகரத்து போன்ற சம்பவங்கள் அமலாபாலின் வாழ்வில் நடந்தபோதும் அவரது சினிமா மார்க்கெட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இப்போது வரை அவர் தென்னிந்திய மொழிகளில் கதாநாயகியாக பரவலாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், தென்னிந்திய சினிமாவில் இருந்து திரிஷா, ராய் லட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷ் என சில நடிகைகள் இந்தி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது அமலாபாலும் ஒரு இந்தி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
இந்தியில் நரேஷ் மல்ஹோத்ரா இயக்கும் படத்தில் அர்ஜூன் ராம்பாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் அமலாபால். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் நடிக்க பல நடிகைகளை வைத்து போட்டோசூட் நடத்தி திருப்தி இல்லாமல் இருந்து வந்த நரேஷ் மல்ஹோத்ரா, அமலாபாலை அழைத்து போட்டோ சூட் நடத்தியபோது, அந்த கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருந்ததால் உடனே அவரை ஒப்பந்தம் செய்து விட்டாராம்.
இந்த செய்தியை தனது சினிமா நண்பர்களிடம் சொல்லி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வருகிறார் அமலாபால்.