ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'பிரேமம்' படத்தில் அறிமுகமாகி 'மலர் டீச்சர்' சாய்பல்லவி போலவே, தனது தனித்தன்மையால் ரசிகர்களை கவர்ந்த இன்னொரு நாயகி தான் மடோனா செபாஸ்டியன். அதன்பிறகு மலையாளத்தில் திலீப்புடன் 'கிங் லையர்' படத்தில் நடித்த இவர், தமிழுக்கு வந்து விஜய்சேதுபதி, தனுஷ் ஆகியோருக்கு ஜோடியாக நடித்தார்.
அப்படியே கீர்த்தி சுரேஷை போல இவரும் பிக்கப்பாகி முன்னணி நடிகையாக மாறுவார் என பார்த்தால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வராமல் தடுமாறி வருகிறார். தற்போது விஜய்சேதுபதியுடன் நடித்துவரும் 'ஜூங்கா' படம் மட்டும் தான் இவரது கைவசம் இருக்கிறது.
இந்தநிலையில் மீண்டும் மலையாளத்தில் இருந்து வாய்ப்பு தேடிவர, இதை விட்டுவிட கூடாதென ஒப்புக்கொண்டுள்ளார் மடோனா. ஆசிப் அலி கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்திற்கு 'இப்லிஸ்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆசிப் அலி-பாவனாவை வைத்து 'அட்வென்ச்சர்ஸ் ஆப் ஓமனக்குட்டன்' படத்தை இயக்கிய ரோஹித் என்பவர்தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார்.