Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காற்றில் கலந்த மயிலு - ஸ்ரீதேவி உடல் அரசு மரியாதையுடன் தகனம்

28 பிப், 2018 - 18:09 IST
எழுத்தின் அளவு:

நடிகை ஸ்ரீதேவி உடல் ரசிகர்களின் கண்ணீர் அஞ்சலியுடனும், மகாராஷ்டிரா மாநில அரசின் மரியாதையுடனும் தகனம் செய்யப்பட்டது.

தமிழகத்தில் பிறந்து தென்னிந்தியாவில் கனவு கன்னியாக வலம் வந்து, பாலிவுட்டிலும் பிரபலமாகி முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்ற நடிகை ஸ்ரீதேவி, எதிர்பாரதவிதமாக கடந்த சனிக்கிழமை அன்று துபாயில் மரணம் அடைந்தார். உறவினரின் திருமண நிகழ்வுக்காக சென்றிருந்த ஸ்ரீதேவி அங்கு தங்கியிருந்த ஹோட்டல் அறையின் பாத்ரூமில் தடுமாறி, குளியல் தொட்டியில் விழுந்து மரணம் அடைந்தார்.

துபாய் அரசு, ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இல்லை என அறிவித்து பிரேத பரிசோதனை, எம்பாமிங் போன்றவகளை முடித்து நேற்று உடலை ஒப்படைத்தது. அதன்பின்னர், தனி விமானம் மூலம் ஸ்ரீதேவியின் உடல் நேற்று இரவு 10.30 மணியளவில் மும்பை வந்தது. அவரது உடல் மும்பையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டது. அங்கு ஏராளமான பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை 9.30 மணிக்கு மும்பை செலிபிரேசன் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சல்மான் கான், ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா, ஜெயா பச்சன், ஜான் ஆபிரஹாம், அஜய் தேவ்கன், கஜோல், சாகித் கபூர், சித்தார்த் மல்கோத்ரா, தபு, சுஷ்மிதா சென், விவேக் ஓபுராய், பூமிகா, நீல் நிதின் முகேஷ், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ், சரோஜ் கான், ரேகா, ராஜ்குமார் ராவ் உள்ளிட்ட பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக நேற்று முன்தினம் ரஜினி, கமல், நாசர் உள்ளிட்ட தமிழ் பிரபலங்களும் ஸ்ரீதேவி மகளிடம் ஆறுதல் கூறினர்.

பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமா மற்றும் இந்திய சினிமாவில் பல திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். திரையுலகினர் மட்டுமல்லாது, அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் ஆகியோரும் ஸ்ரீதேவிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

நண்பகல் 2 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் ஸ்ரீதேவியின் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, மும்பை, வில்லேபார்லே மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மாநில அரசு மரியாதையுடன், மாலை 5.30 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

16 வயதினிலே படத்தில் செந்தூரப்பூவே செந்தூரப்பூவே... என ரசிகர்களை மயக்கிய ஸ்ரீதேவி, இன்று காற்றோடு கலந்துவிட்டார். ஆனால் அவர் நடித்த படங்கள் என்றும் ரசிகர்களை விட்டு நீங்காது என்பது மட்டும் திண்ணம்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
கஸ்தூரி வக்கிரம்கஸ்தூரி வக்கிரம் தனஞ்செயன் தயாரிப்பில் துமாரி சுலு தமிழ் ரீ-மேக் தனஞ்செயன் தயாரிப்பில் துமாரி சுலு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

maran - chennai ,இந்தியா
03 மார், 2018 - 14:49 Report Abuse
maran என்ன காரணித்தினால் அரசு மரியாதை செய்ய படுகிறது . அரசு பணம் விரயத்திற்கு யார் பொறுப்பு ஏற்பது அரசு மரியாதை செய்ய வேண்டும் என்கிற முடிவை யார் எடுத்தது
Rate this:
01 மார், 2018 - 09:12 Report Abuse
Kalyanaraman குடி போதையில் விழுந்து இறந்தவருக்கு அரசு மரியாதை.பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு. அப்படியே தியாகின்னு அறிவிச்சு குடும்பத்துக்கு பென்சன் குடுங்க.
Rate this:
Kamal Basha - sudugadu,டென்மார்க்
01 மார், 2018 - 08:30 Report Abuse
Kamal Basha SHE IS ACTRESSS/ NOT FREEDOM FIGHTER
Rate this:
Kamal Basha - sudugadu,டென்மார்க்
01 மார், 2018 - 08:29 Report Abuse
Kamal Basha she is not a freedom fighter????? then why????
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Viswasam
  • விஸ்வாசம்
  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :சிவா
  Tamil New Film Neeya 2
  • நீயா 2
  • நடிகர் : ஜெய்
  • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
  • இயக்குனர் :எல்.சுரேஷ்
  Tamil New Film Monster
  • மான்ஸ்டர்
  • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
  • நடிகை : பிரியா பவானி சங்கர்
  • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
  Tamil New Film Ayogya
  • அயோக்யா
  • நடிகர் : விஷால்
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :வெங்கட் மோகன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in