ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அர்ஜூன் கபூர், பரிணிதி சோப்ரா நடிப்பில் நமஸ்தே இங்கிலாந்து படம் உருவாகிறது. விபுல் ஷா இயக்க ரிலையன்ஸ் நிறுவனமும், ஜெயந்திலால் கதா இணைந்து தயாரிக்கிறார்கள். பல ஊர்களில் பயணிக்கும் காதல் கதையாக நமஸ்தே இங்கிலாந்து உருவாக உள்ளது. சில தினங்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸில் படப்பிடிப்பு ஆரம்பமானது. லண்டன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் படமாக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
அர்ஜூன், பரிணிதி இணைந்து வணக்கம் சொல்ல, பின்னணியில் லண்டன் பிக் பென் மணிக்கூண்டும், கீழே பஸ், கார் மற்றும் பைக்கில் அர்ஜூன்-பரிணிதி அமர்ந்திருப்பது போன்றும் இடம்பெற்றுள்ளது. கூடவே ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். வரும் டிச., 7-ம் தேதி படம் ரிலீஸாகிறது.