ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புருவப் புயல் பிரியா பிரகாஷ் வாரியர் சமூக வலைத்தளங்களில் கடந்த பத்து நாட்களாக பரபரப்பாக இருக்கிறார். சில வினாடிகள் மட்டுமே இடம் பெற்ற புருவ அசைவில் இந்தியத் திரையுலகில் ஒரு புயலையே கிளப்பிவிட்டார் பிரியா. சில ஆயிரங்கள் மட்டுமே இருந்த அவருடைய டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தள கணக்குகள் கடகடவென பல லட்சங்களைக் கடந்து வருகிறது.
இன்ஸ்டாகிராமில் குறுகிய காலத்தில் 45 லட்சம் தொடர்பாளர்களைக் கடந்து பிரியா பிரகாஷ் புதிய சாதனை படைத்துள்ளார். அவருடைய டுவிட்டர், பேஸ்புக் கணக்குகளிலும் நாளுக்கு நாள் தொடர்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இன்னும் ஒரு படம் கூட வெளிவராத நிலையில், ஒரு பாடல் வீடியோவிலேயே இந்தியாவில் இந்த அளவிற்கு வேறு யாரும் புகழ் பெற்றதில்லை.
பல பிரபல ஹிந்தி, தெலுங்கு நடிகர்கள் கூட பிரியாவை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். பிரியாவின் புகழ் உச்சத்தில் பறந்து கொண்டிருப்பதால் இப்போது 'ஒரு அடார் லவ்' படத்தில் அவர் நடிக்கவிருக்கும் காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கிறார்களாம். படம் வெளிவரும் போது இந்திய அளவில் வசூல் சாதனை புரிந்தால் அது மலையாளத் திரையுலகத்திற்கே பெருமைதான்.