மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
ரஜினி மக்கள் மன்றத்திற்கு புதுச்சேரி மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மன்ற பொறுப்பாளர் வி.எம்.சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 19ந் தேதி நடைபெற்ற புதுச்சேரி மாநில ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்தில் அதன் மாநில நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடத்தப்பட்டு, அதன் மாநில அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில நிர்வாகிகளாக கீழ்கண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை, ரஜினிகாந்த் ஒப்புதலுடன் அறிவிக்கின்றோம்.
மாநில பொறுப்பாளர் - ரஜினி சங்கர்
மாநில செயலாளர் - பிரபாகர்
மாநில இணைச் செயலாளர் - ஜோதி
மாநில துணைச் செயலாளர்கள் - யுவராஜ், காத்தவராயன், நெப்போலியன்
மாநில இளைஞர் அணிச்செயலாளர் - காமராஜ்
மாநில செய்தித் தொடர்பாளர் - தாரகை ராஜா
மேலே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு அனைத்து மக்கள் மன்ற உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் சுதாகர் குறிப்பிட்டுள்ளார்.