Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நாச்சியார், தானாகவே தோல்வியைத் தேடிய பாலா

21 பிப், 2018 - 15:53 IST
எழுத்தின் அளவு:
Nachiyar-:-Bala-did-not-talk-about-any-thing

தாரை தப்பட்டை படத்தின் படுதோல்விக்குப் பிறகு பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்குமார், புதுமுகம் இவானா நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் நாச்சியார். படத்தில் நடித்துள்ள முக்கிய நட்சத்திரங்களின் நடிப்பையும், படத்தின் கதையையும் பெரும்பாலானவர்கள் பாராட்டி வருகிறார்கள். ஆனால், பாராட்டு கிடைக்கும் அளவிற்கு படத்திற்கு வசூல் ரீதியாக பெரும் வரவேற்பு கிடைக்கவில்லை.

இப்படிப்பட்ட படத்தை மக்களிடம் சரியாகக் கொண்டு போய் சேர்க்காமல் பாலா தோல்வியடைய வைத்துவிட்டாரே என்ற ஆதங்கம் திரையுலகத்தினரிடம் உள்ளது. அவரே தயாரிப்பாளர் என்பதால் அவர் இது பற்றி கவலைப்படப் போவதில்லை. மேலும், படத்தை அவர் வேறொருவருக்கு நல்ல விலைக்கு விற்றுவிட்டார்.

பொதுவாக, தான் இயக்கும் படங்கள் என்றாலே அது பற்றி முன்னரே எந்த ஒரு செய்தியையும் வரவிட மாட்டார் பாலா. பட வெளியீட்டிற்கு சில நாட்கள் முன்னர்தான் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவருடைய படத்தைப் பற்றிப் பேசுவார், அப்போதும் அளந்துதான் பேசுவார். ஆனால், நாச்சியார் படம் பற்றி பாலா எந்த ஒரு பத்திரிகையாளரையும் சந்திக்கவில்லை. படத்தில் நடித்துள்ள ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் சந்தித்துப் பேசுவதற்கும் அவர் தடை போட்டுவிட்டார். இதனால், நாச்சியார் படம் குறித்த தகவல்கள் ரசிகர்களிடம் சரியாகப் போய்ச் சேரவில்லை.

நன்றாக ஓட வேண்டிய நாச்சியார் படத்தை பாலாவே ஏன் இப்படி செய்தார் என சிலர் கோலிவுட்டில் கேள்வி எழுப்புகிறார்கள்.

Advertisement
மேக்கப் தாமதம், கேட்பாரா கீர்த்தி சுரேஷ் ?மேக்கப் தாமதம், கேட்பாரா கீர்த்தி ... எமி ஜாக்சன் இந்த ஆண்டு காதல் திருமணம் ? எமி ஜாக்சன் இந்த ஆண்டு காதல் ...


வாசகர் கருத்து (3)

21 பிப், 2018 - 17:59 Report Abuse
RathaRoja padam super
Rate this:
gijusha -  ( Posted via: Dinamalar Android App )
21 பிப், 2018 - 17:53 Report Abuse
gijusha Bala meedhu eppozhudhum ungalukku irukkiradhu..adhu yaen endru theriya villai..naan indru dhaan naachiyar paarthen blore IL..arangu niraindha kaatchi..padam tholvi enbadhu sutha poi
Rate this:
Shanu - Mumbai,இந்தியா
21 பிப், 2018 - 17:21 Report Abuse
Shanu இவர் மோனிகாவை படுத்திய பாடு, இவர் மீது வெறுப்பை கொண்டு வந்தது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Thimiru pudichavan
    Tamil New Film Kaa
    • கா
    • நடிகை : ஆண்ட்ரியா
    • இயக்குனர் :நாஞ்சில்
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in