ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு ‛சீமராஜா' என பெயரிடப்பட்டுள்ளது. அவரது பிறந்த நாளான இன்று படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டது.
சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்து தனக்கென தன ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் இன்று(பிப்.,17) பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு திரை நட்சத்திரங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று, ஆர்.டி ராஜா தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. ‛சீமராஜா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ‛பர்ஸ்ட் லுக்'கும் வெளியிடப்பட்டது.