ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சினிமாவில் 'ஹேப்பி வெட்டிங்' என்கிற சின்ன பட்ஜெட் படம் மூலம் பிரபலமான இயக்குனர் ஓமர் லுலு. அதை தொடர்ந்து 'சங்க்ஸ்' என்கிற படத்தையும் ரிலீஸ் செய்து ஹிட் அடித்தார். தற்போது தனது மூன்றாவது படமான 'ஒரு ஆதார் லவ்' படத்தையும் இயக்கி முடித்துவிட்டார்.
கடந்த ஒருவாரமாக புருவ அழகி பிரியா பிரகாஷ் வாரியரால் இந்தப்படத்தின் பாடலும், அதன்மூலம் படமும் டிரெண்டிங்கில் இடம் பிடித்தது. இதனை தொடர்ந்து இந்தப்படத்தின் வியாபாரத்திற்கு மவுசு கூடியுள்ளது. தெலுங்கில் இதன் டப்பிங் உரிமையை கொடுக்க 2 கோடி ரூபாய் விலை வைத்துள்ளாராம் படத்தின் தயாரிப்பாளர் அவுசப்பச்சன் வாழக்குழி..
இதில் பியூட்டி என்னவென்றால் படத்தின் மொத்த பட்ஜெட்டே ஒன்றரை கோடி ரூபாய் தானாம். முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள படத்திற்கு, ஒரு பாடல் ஹிட்டானதை மட்டும் வைத்துக்கொண்டு, அதுவும் தெலுங்கில் இவ்வளவு விலை பேசுவது, நியாயமில்லை என விநியோகஸ்தர்கள் தரப்பில் பேசிக்கொள்கிறார்களாம்.