Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் வழியில் ரஜினியும் தமிழகம் முழுக்க சுற்றுபயணம்?

15 பிப், 2018 - 12:52 IST
எழுத்தின் அளவு:
Rajini-also-to-visit-allover-Tamilnadu

நடிகர்கள் ரஜினி - கமல் இருவருமே அரசியலில் களமிறங்கி உள்ளனர். கமல் வருகிற பிப்., 21-ம் தேதி முதல் தனது அரசியல் பயணத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆரம்பிக்கிறார். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.

மற்றொருபுறம் நடிகர் ரஜினி, மாவட்டம்தோறும் நிர்வாகிகளை நிர்வகித்து வருகிறார். இதற்கான வேலைகள் மும்முரமாய் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில், அவரது நண்பரும், அரசியல் ஆலோசகருமான தமிழருவி மணியன் இன்று சந்தித்தார்.

இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில் ரஜினியின் தீவிர அரசியல் குறித்தும், மாவட்டம் தோறும் நிர்வாகிகளை விரைந்து நியமிப்பது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் ரஜினி மக்கள் மன்றத்திற்கான நிர்வாகிகள் அனைவரையும் நியமித்துவிட்டு, அடுத்த மாதம் முதல் தமிழகம் முழுவதும் ரஜினி சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
மாரி செல்வராஜ் என் மகன்: ராம் நெகிழ்சிமாரி செல்வராஜ் என் மகன்: ராம் ... ரஜினி மக்கள் மன்ற செயலாளரான ராஜூ மகாலிங்கம் ரஜினி மக்கள் மன்ற செயலாளரான ராஜூ ...


வாசகர் கருத்து (15)

Ramesh - New Delhi,இந்தியா
16 பிப், 2018 - 11:46 Report Abuse
Ramesh அறுபது வயதுவரை நன்றாக சினிமாவில் ஆட்டம் போட்டு, பணம் சம்பாதித்துவிட்டு, வாய்ப்பு குறையும்போது மக்களுக்கு சேவைசெய்ய கிளம்பிவிட்டார்கள். ஒருவருக்கு இப்போதுதான் இங்கே சாதி, மாணவர், அரசு பிரச்சனை பற்றி தெரிகிறது.. மற்றவருக்கு ஒழுக்கம் பற்றி புரிகிறது.. ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்பது விதி..
Rate this:
Nagarajan L. Royal - chennai,இந்தியா
16 பிப், 2018 - 11:36 Report Abuse
Nagarajan L. Royal உங்களை இப்போ எவன் சுற்றுப்பயணம் செய்ய சொன்னான். என் தாய் தமிழ்நாட்டை அளிப்பதற்குத்தான் இந்த போட்டி கமல் & ரஜினி. இந்த இரண்டு கூத்தாடிகளால் தமிழ்நாட்டிற்கு ஒரு முன்னேற்றம் இல்லை. தமிழ்நாட்டு பிரச்சனைகளை இவர்களால் தீர்க்க முடியாது. பெருந்தலைவர் சொன்னமாதிரி அவரவர் வீட்டிற்கு அவரவர் தான் அப்பனாக முடியும். முதல்ல மனசாட்சி படி ஆள வாங்கடா.
Rate this:
Karun Muruga - banglore,இந்தியா
16 பிப், 2018 - 10:34 Report Abuse
Karun Muruga என்னதான் முக்குனாலும் ஒன்னும் ஆகாது வயசாச்சின்ன ஓரமா உட்கார வேண்டியது தானே இந்த வயசுல ஏன்டா இப்படி நேரா C M ஆவிங்களோ.....வேற தகுதியே வேணுமோ.. போங்கடா நீங்களும் ஒன்ன நம்புரானுவ பாரு அவனை சொல்லணும்
Rate this:
thonipuramVijay - Chennai,இந்தியா
16 பிப், 2018 - 02:13 Report Abuse
thonipuramVijay ரஜினி கமல் வழியை பின்பற்றினால் ...அதில் கமல் ரஜினியை வெல்வது உறுதி... ரஜினி கமலை வெல்ல வேண்டுமாயின் அவர் தனி வழியாக பயணிப்பதே நல்லது .....ஆனால் ஒன்று இவர்கள் இருவரும் மக்கள் மனதை வெல்ல முடியாது....
Rate this:
Manian - Chennai,இந்தியா
15 பிப், 2018 - 20:18 Report Abuse
Manian முதல்வர், உப முதல்வர் யார் என்று இன்னும் முடிவாகவில்லையே இரண்டு பேருமே தேமிழன்க இல்லையே சீமான் எங்கே? சீமான் எங்கே?
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Titanic kadhalum kavunthu pogum
  Tamil New Film Seemathurai
  • சீமத்துரை
  • நடிகை : வர்ஷா பொல்லம்மா
  • இயக்குனர் :சந்தோஷ் தியாகராஜன்
  Tamil New Film Marainthirunthu Paarkum Marmam Enna
  Tamil New Film Kaaviyan
  • காவியன்
  • நடிகர் : ஷாம்
  • நடிகை : ஸ்ரீதேவி குமார்
  • இயக்குனர் :பார்த்தசாரதி
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in