Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நானும் காதலில் விழுந்தேன் : ரைசா வில்சன்

14 பிப், 2018 - 16:11 IST
எழுத்தின் அளவு:
I-also-fall-in-love-says-Raiza-willson

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் பலர். அவர்களில் ரைசா வில்சனும் முக்கியமானவர். மாடலிங் துறையில் இருந்து வந்த ரைசா, பிக்பாஸ் புகழால் இப்போது பியார் பிரேமா காதல் என்ற படத்தில் பிக்பாஸில் கலந்து கொண்ட ஹரீஷ் கல்யாண் உடன் நடித்து வருகிறார். காதலர் தினத்தையொட்டி அவர் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி...

பிக்பாஸ் அடையாளம் எப்படி இருக்கிறது?

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய பேருக்கு என்னை அடையாளம் தெரிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

மாடலிங் பயணம் எப்படியிருக்கிறது?
6 ஆண்டுகளாக மாடலிங் துறையில் உள்ளேன். என் சொந்த ஊர் பெங்களூரு. ஆனால் சென்னை, ஐதராபாத், கேரளா என இப்படி பல ஊர்களில் மாடலிங் செய்து வருகிறேன்.

பிக்பாஸ் அனுபவம் எப்படி இருந்தது?
எதுவுமே தெரியாமல் தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். தமிழில் முதல் சீசன் என்பதால் அதில் பங்கேற்றவர்களுக்கும் அப்படித்தான் இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தபோது, ஏதோ வித்தியாசமான நிகழ்ச்சி என்ற மனநிலையில் தான் கலந்து கொண்டேன்.

குடும்பத்தினரை பிரிந்த அனுபவம் எப்படியிருந்தது?
நான் எப்போது வெளியே போனாலும் இரவு வீட்டுக்கு வந்துவிடுவேன். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு மாதம் கலந்து கொண்டபோது குடும்பத்தாரை மிகவும் மிஸ் செய்தேன். இருந்தாலும் அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.

படிப்பு?

பிகாம் பிடித்துள்ளேன். மாடலிங் பண்றேன்.

டிவி நட்பு இன்னும் இருக்கா?
என் கூட யாரும் சண்டை போடவில்லை. ஆகையால் எல்லோருடன் நட்பாக உள்ளேன். இப்போது கூட மலேசியாவில் நான், சினேகன், ஓவியா ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளோம்.

காதல் அனுபவம்?

எனக்கு அதில் அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்வேன். கல்லூரியில் படிக்கும்போது ஒரு காதல் வந்தது. சினிமாவுக்கு எல்லாம் சென்றோம். ஆனால் அந்த காதல் கடைசியில் வெற்றி பெறவில்லை, பிரிந்துவிட்டோம்.

திருமணம் எப்போது?
கண்டிப்பாக காதல் திருமணம் தான், ஆனால் இப்போது இல்லை, அதற்கு இன்னும் நாள் உள்ளது.

இப்போது நடிக்கும் படங்கள் பற்றி?
படங்களில் நடிக்க அவசரம் காட்டவில்லை. யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில், ஹரீஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் படத்தில் நடிக்கிறேன். இந்தப்படம் வெளிவரட்டும், மக்கள் எப்படி ஏற்று கொள்கிறார்கள் என்று பார்த்துவிட்டு அடுத்தப்படத்தில் நடிப்பது பற்றி முடிவு செய்வேன். நிறைய படங்களில் நடிப்பதை விட நல்ல படங்களில் நடிக்கவே விரும்புகிறேன்.

பிக்பாஸ் ஹரீஸ் உடன் எப்படி ஜோடியாக நடித்தீர்கள்?

நானும், ஹரீஸூம் ஆடிசன் போனோம். நிச்சயம் நான் தேர்வு செய்யப்படுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. மாடலிங் துறையில் இருந்ததால் ஓரளவுக்கு எப்படி நடிக்கணும் என்று தெரியும்.

விஐபி-2 வில் கஜோல் உடன் நடித்த அனுபவம்?
அது மாடலிங் அசைமென்ட். படம் முழுக்க நான் நின்று கொண்டு தான் இருப்பேன், படத்தில் ஒரு வசனம் கூட கிடையாது. இருந்தாலும் அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.

எவ்வளவு விளம்பரங்களில் நடித்துள்ளீர்கள்?
ஒரு 500 விளம்பரங்களிலாவது நடித்திருப்பேன். 2011-ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றேன். அதன்பிறகு நிறைய விளம்பரங்களில் நடித்தேன்.

தமிழில் உங்களுக்கு பிடித்த ஹீரோ?
தமிழில் அவ்வளவாக படங்கள் பார்த்தது இல்லை. சமீபத்தில் விக்ரம் வேதா படம் பார்த்தேன். மாதவன் செம நடிப்பு. அவரை மட்டுமே என் கண்கள் பார்த்தது. ஐ லவ் மாதவன்.

பெண்களுக்கு சொல்ல விரும்புவது?
பெண்கள் எப்போதுமே வலிமையானவர்கள். என் குடும்பத்தில் யாரும் இந்த துறையில் இல்லை. நான் ஆகவே மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டு வந்தேன். பல துறைகளில் பெண்கள் முன்னணியில் உள்ளனர். ஆண் - பெண் பாகுபாடு வேண்டாம், இருவருமே திறமைசாலிகள் தான்.

இவ்வாறு ரைசா வில்சன் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சண்டைக்காட்சி லீக் : விஜய் படக்குழு அதிர்ச்சிசண்டைக்காட்சி லீக் : விஜய் படக்குழு ... சினிமாவிற்கு கமல் குட்-பை சினிமாவிற்கு கமல் குட்-பை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Maari 2
    • மாரி 2
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : சாய் பல்லவி ,வரலெட்சுமி
    • இயக்குனர் :பாலாஜி மோகன்
    Tamil New Film Dev
    • தேவ்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ரகுல் ப்ரீத்தி சிங்
    • இயக்குனர் :ரஜத் ரவிஷங்கர்
    Tamil New Film Adangamaru
    • அடங்கமறு
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :கார்த்திக் தங்கவேல்
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in