Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் பிசியான விமல்: 5 படங்களில் நடிக்கிறார்

13 பிப், 2018 - 10:22 IST
எழுத்தின் அளவு:
Vimal-again-busy-:-acting-in-5-movies

விமல் நடித்த கடைசி வெற்றிப் படம் மஞ்சப்பை. அதன்பிறகு அவர் நடித்த நேற்று இன்று, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, காவல், அஞ்சல, மாப்பிள்ளை சிங்கம் படங்கள் அவருக்கு சரியாக அமையவில்லை. அதனால் ஒரு வெற்றி தேவை என்கிற கட்டாயத்தில் தானே சொந்தமாக தயாரித்து நடித்த படம் தான் மன்னர் வகையறா. பூபதி பாண்டியன் இயக்கத்தில் உருவான இந்தப் படம், இயக்குனருடன் கருத்து வேறுபாடு, கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து சமீபத்தில் வெளியானது. தனது சொந்த படம் காரணமாக பிற படங்களில் நடிக்காமல் இருந்தார் விமல். இதனால் கடந்த ஆண்டு அவர் நடிப்பில் ஒரு படம்கூட வெளிவரவில்லை.

தற்போது மன்னர் வகையறா வெளிவந்து ஓரளவுக்கு நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. 50 தியேட்டர்களில் 2வது வாரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. மன்னர் வகையறாவுக்கு பிறகு தற்போது 5 படங்களில் நடித்து வருகிறார் விமல். வெற்றிவேல் பட இயக்குனர் வசந்தமணியின் படம், ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் அசோக்கின் படம், குறும்பட இயக்குனர் விஜய்யுடன் ஒரு படம் ஆகியவற்றில் நடிக்கிறார். இதுதவிர சற்குணம் இயக்கத்தில் கே 2 (களவாணி 2ம் பாகம்) படத்திலும் நடிக்கிறார். வரலட்சுமியுடன் நடித்து முடித்துள்ள கன்னிராசி அடுத்து வெளிவர உள்ளது. ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு விமல் மீண்டும் பிசியாகி உள்ளார் விமல்.

Advertisement
தெலுங்கு படம் ரிச்சர்டுக்கு கைகொடுக்குமா?தெலுங்கு படம் ரிச்சர்டுக்கு ... சினிமாவில் நடிக்க மாட்டேன் : திவ்யா சத்யராஜ் சினிமாவில் நடிக்க மாட்டேன் : திவ்யா ...


வாசகர் கருத்து (1)

VSK - CARY,யூ.எஸ்.ஏ
13 பிப், 2018 - 17:47 Report Abuse
VSK மீண்டும் தலைக்கனம் வராம இருந்தா சரி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Titanic kadhalum kavunthu pogum
    Tamil New Film Seemathurai
    • சீமத்துரை
    • நடிகை : வர்ஷா பொல்லம்மா
    • இயக்குனர் :சந்தோஷ் தியாகராஜன்
    Tamil New Film Marainthirunthu Paarkum Marmam Enna
    Tamil New Film Kaaviyan
    • காவியன்
    • நடிகர் : ஷாம்
    • நடிகை : ஸ்ரீதேவி குமார்
    • இயக்குனர் :பார்த்தசாரதி
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in