ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹவுஸ்புல் படங்களின் வரிசையில் ஏற்கனவே மூன்று பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. தற்போது இதன் நான்காம் பாகம் உருவாக உள்ளது. முந்தைய மூன்று பாகங்களில் அக்ஷ்ய் குமார், ரித்தேஷ் தேஷ்முக் தொடர்ந்து நடித்து வருகின்றனர். நான்காம் பாகத்திலும் இவர்கள் தொடர உள்ளனர். இந்நிலையில், ஹவுஸ்புல் 4-ல் பாபி தியோல் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, இயக்குநர் சாஜித் கான் மற்றும் தயாரிப்பாளர் சாஜித் ஆகியோர் பாபியிடம் பேசி வருகின்றனர். இன்னும் அவர் ஓகே சொல்லிவில்லை என்றாலும் நிச்சயம் நடிப்பார் என தெரிகிறது. தற்போது ரேஸ் 3 படத்தில் நடித்து வருகிறார் பாபி. இதை முடித்ததும் ஹவுஸ்புல் 4-ல் இணைவார் என தெரிகிறது. ஹவுஸ்புல் 4, ஜூன் மாதம் ஆரம்பமாக உள்ளது. அடுத்தாண்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.