Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காலா ரிலீஸ் திடீர் அறிவிப்பு, சரியா ?

11 பிப், 2018 - 14:18 IST
எழுத்தின் அளவு:
Kaala-release-date-makes-crisis-for-small-budget-films

தனுஷின் படத் தயாரிப்பு நிறுவனமான ஒண்டர் பார் பிலிம்ஸ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள படம் காலா. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 27ம் தேதி வெளியாகும் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்தத் தேதியில் முதலில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம்தான் வருவதாக இருந்தது. ஆனால், அப்படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் முடிவடையாததால் அந்தப் படம் மேலும் தள்ளிப் போனது.

அந்தத் தகவலை அறிந்த சில தயாரிப்பாளர்கள் ஏப்ரல் 27ம் தேதி அவர்களது படங்களை வெளியிட திட்டமிட்டார்கள். அதன்படி மிஸ்டர் சந்திரமௌலி படம் ஏப்ரல் 27ம் தேதி வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. மேலும் சில தயாரிப்பாளர்கள் அன்று படங்களை வெளியிட முடிவு செய்திருந்த நிலையில் காலா படத்தை அந்தத் தேதியில் வெளியிட அறிவித்துவிட்டதால் அவர்களது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்கள்.


காலா ஏப்ரல் 27ம் தேதி வெளியாவதால், மிஸ்டர் சந்திரமௌலி படத்தைத் தள்ளி வைப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் அறிவித்துள்ளார். “ஏப்ரல் 27ம் தேதி காலா வருவதால் வேறு யாராலும் அன்று நிற்க முடியாது. ஏப்ரல் 27ம் தேதி எங்களது மிஸ்டர் சந்திரமௌலி படம் வெளியாகும் என்று முதலில் அறிவித்தோம். இப்போது வெளியீட்டுத் தேதியை மாற்றியமைத்து அறிவிக்க வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.


ரஜினிகாந்த் போன்ற நடிகர்கள் நடித்து படங்கள் வெளிவரும் போது முன்னர் அறிவிக்கப்பட்ட சிறிய படங்கள் பாதிப்படைவது நியாயமே இல்லை. தமிழ்நாட்டு அரசியலில் சிஸ்டம் சரியில்லை என்று கூறும் ரஜினிகாந்த் அவருடைய பட வெளியீட்டு சிஸ்டத்தை மாற்றி சிறிய படங்களுக்கும் வழி விடுவாரா ?. முதலில் அவருடைய திரைத்துறை சார்ந்த சிஸ்டத்தை சரி செய்யட்டும் என்று கோலிவுட்டில் நேற்று முதலே குரல்கள் எழ ஆரம்பித்துவிட்டன.


Advertisement
கலகலப்பு 2, சுந்தர் சி சம்பளம் 10 கோடி ?கலகலப்பு 2, சுந்தர் சி சம்பளம் 10 கோடி ? மார்ச் 1ந் தேதி முதல் சினிமா ஸ்டிரைக்: திரையரங்க உரிமையாளர்கள் திருச்சியில் கூடுகிறார்கள் மார்ச் 1ந் தேதி முதல் சினிமா ...


வாசகர் கருத்து (19)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
12 பிப், 2018 - 12:29 Report Abuse
Mirthika Sathiamoorthi அந்த தேதியில் முதலில் 2 .௦ வருவதாக இருந்தது...அப்போ சிறு படம் தயாரிப்பாளர்கள் எங்கப்படம் வரணும் உங்க படத்தை தள்ளிவைங்கன்னா சொன்னாங்க?...ரஜினி படம் வரவேண்டிய தேதியில் இன்னொரு ரஜினி படம் வருது.. இதுல எங்கேங்க சின்ன தயாரிப்பாளர்கள் வந்தாங்க? என்னமோ மாசம் மாசம் ரஜினி படம் வந்து இவங்க வழியில டோல் கேட்ட போட்டு சின்ன படம் வரக்கூடாதுன்னு அடம் பிடிக்கிறது இருக்கட்டும்....கடந்த வருடம் 200 படங்களில் 75 % சின்ன படங்கள்..இதுல எத்தனை படம் தியேட்டருக்கு மக்களை கூட்டியாந்துச்சு? ( கடந்த வருஷம் ஒரு ரஜினி படமும் ரிலீஸ் ஆகலை கவனிக்கவும்..) போனவருசம் வெளிவந்த படங்களில் 20 படத்துக்கு குறைவான படங்கள் மக்கள் வரவேற்பை பெற்றது... புதுமுக நடிகர்களும்...புது தயாரிப்பாளர்களும் அதிகரித்துக்கொண்டே போனாலும் மக்களின் வரவேற்பை பெற தவறியதற்கு ரஜினி காரணமா? அப்போ அனுஷ்காவின் பாகமதி, ஹிந்தி பத்மாவதி...இதெல்லாம் கல்லா கட்டுனதுக்கு ரஜினி படம் ரிலீஸ் ஆகாததுதான் காரணமா?...கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க.. அதென்ன பணம் பாக்குறார்..ஏன் பாக்க கூடாத? எவ்வளவோ பேர் சினிமாவை வச்சு அரசியல் செய்றாங்க...இவர் அரசியலை வச்சு சினிமா செய்யிறார்...நானா இருந்தாலும், நீங்களா இருந்தாலும் யாரா இருந்தாலும் ...முதல்ல பணம் பாத்துட்டுதான் மத்த வேலை...இதுதான் உண்மை..
Rate this:
RAJA - TRICHY,இந்தியா
12 பிப், 2018 - 11:17 Report Abuse
RAJA கோடை விடுமுறையில் தமிழனிடம் உள்ள காசை கபளீகரம் செய்யவே காலா படம் ரிலீஸ்
Rate this:
Raghavendran Sathya Narayanan - CHENNAI,இந்தியா
12 பிப், 2018 - 11:01 Report Abuse
Raghavendran Sathya Narayanan அவங்க என்ன எதிர் பார்க்கிறாங்க னு தெரியல... ஏப்ரல் 27 னு பிப் 10 சொல்லிட்டாரே. வேற என்ன வேணும். குத்தம் சொல்லனும்னா எல்லாரையும் குத்தம் சொல்லலாம்.
Rate this:
Gopalan PS - Chennai,இந்தியா
12 பிப், 2018 - 10:58 Report Abuse
Gopalan PS இந்த காலகாகவும் 2 .௦ படத்துக்காகவும்தானே அரசியல் பிரவேச நாடகமே.
Rate this:
மணிமேகலை - paris ,பிரான்ஸ்
12 பிப், 2018 - 09:05 Report Abuse
மணிமேகலை இதுதான்யா இவரோட சிஸ்டம் .
Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Sandakozhi 2
  • சண்டகோழி 2
  • நடிகர் : விஷால்
  • நடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி
  • இயக்குனர் :லிங்குசாமி
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Sandi Muni
  • சண்டி முனி
  • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
  • நடிகை : மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
  Tamil New Film VadaChennai
  • வடசென்னை
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in