சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
விரைவில் தனது அரசியல் பயணத்தை துவக்க உள்ள கமல், புதிய இணையதளம் ஒன்றை துவக்கி உள்ளார்.
கமல் அரசியல் கட்சி தொடங்குவது 100 சதவிகிதம் உறுதியாகி விட்டது. நாளை நமதே என்ற தலைப்பில் தனது சுற்றுப்பயணத்தையும் அறிவித்துவிட்டார். இந்த நிலையில் கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்ப்பதற்காக naalainamadhe.maiam.com என்ற புதிய இணையதளத்தினை இன்று தொடங்கினார்.
"கிராமியமே நம் தேசியம் என்றால் நாளை நமதே.ஒரு புதிய தமிழகம் உங்களால் தொடங்குகிறது. மாதிரி கிராமம் ஒன்றை கட்டுவதற்கான எனது இயக்கத்தின் ஒரு பகுதியாக வாருங்கள் " என்று அதில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன் கீழே பதிவு செய்வதற்கு ஏற்ற வகையில், பெயர், பிறந்த தேதி, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, வசிக்கும் நாடு, நகரம் அல்லது மாவட்டம் உள்ளிட்ட விவரங்களை தெரிவிப்பதற்கான பக்கம் அமைந்துள்ளது. இதனை பூர்த்தி செய்து அப்லோட் செய்தால் கமல் கட்சியின் உறுப்பினராகலாம்.