Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

50 கோடி வசூலைக் கடந்த 'பாகமதி'

06 பிப், 2018 - 18:08 IST
எழுத்தின் அளவு:
Bhaagamathie-collected-Rs.50-crore?

தெலுங்கில் நேரடியாக எடுக்கப்பட்டு, தமிழில் டப்பிங் ஆகி கடந்த மாதம் 26ம் தேதி வெளியான படம் 'பாகமதி'. அனுஷ்கா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்தப் படத்திற்கு தமிழில் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பில்லை. ஆனால், தெலுங்கு ரசிகர்களிடத்தில் இந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. நாயகிக்கு அதிக முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் எந்த ஹீரோக்களின் துணையும் இல்லாமல் அனுஷ்கா அவருக்கென தனி வியாபாரத்தையும், வசூலையும் பெற்று திரையுலகத்தினரை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

கடந்த பத்து நாட்களில் இப்படம் சுமார் 50 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொங்கலுக்கு வெளிவந்த பவன் கல்யாண், பாலகிருஷ்ணா ஆகியோர் நடித்த படங்கள் நஷ்டத்தைத் தந்த சூழ்நிலையில் அனுஷ்கா நடித்து வெளிவந்த 'பாகமதி' லாபகரமாக அமைந்துள்ளதாம். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மட்டும் சுமார் 30 கோடி வரையிலும், தமிழ்நாட்டில் 10 கோடி ரூபாயும், அமெரிக்கா, கேரளாவில் தலா 6 கோடி ரூபாயும், மற்ற வசூலையும் சேர்த்து சுமார் 60 கோடியை இந்தப் படம் நெருங்கிவிட்டது என்கிறார்கள்.

'பாகமதி' படம் வெற்றி பெற்றுள்ள நிலையிலும் அனுஷ்கா அடுத்து தமிழ், தெலுங்கில் இன்னும் எந்தப் புதுப் படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை.

Advertisement
மார்ச் மாதம் நடிகை ஸ்ரேயா திருமணம்?மார்ச் மாதம் நடிகை ஸ்ரேயா திருமணம்? மார்ச் 1 முதல் படங்கள் வெளியீடு இல்லை : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு மார்ச் 1 முதல் படங்கள் வெளியீடு இல்லை ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Thimiru pudichavan
    Tamil New Film Kaa
    • கா
    • நடிகை : ஆண்ட்ரியா
    • இயக்குனர் :நாஞ்சில்
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in