ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இயக்கி வரும் படம் "சூப்பர் டீலக்ஸ்". மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்தப்படத்தின் திரைக்கதையை தியாகராஜன் குமாரராஜாவுடன் இணைந்து நலன் குமாரசாமி, மிஷ்கின், நீலன் கே.சேகர் ஆகியோர் எழுதி உள்ளனர். யுவன் இசை அமைக்கிறார், பி.எஸ்.வினோத், நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்கள்.
இந்தப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்க இருக்கிறார். இதை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநங்கை வேடத்தில் இருக்கும் படம் வெளியானது. தற்போது, விஜய் சேதுபதி திருநங்கை வேடத்திற்கு தயாராகும் படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.