ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது | ரூ.200 கோடியை தொட்ட தொடரும் | மூன்று நகைச்சுவை நடிகர்கள் மோதும் மே 16 | என்டிஆர் குடும்பத்தின் நான்காவது தலைமுறை நடிகர் அறிமுகம் | அப்பா இசையில் முதல் தெலுங்குப் பாடல் பாடிய யுவன்ஷங்கர் ராஜா | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - செப்டம்பர் 18 வெளியீடு |
அஜித்தின் பிறந்த நாளான மே 1ம்தேதி பில்லா 2 படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. அஜித் நடித்த ரீமேக் படமான பில்லா ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் வெற்றிபெற்றது. அந்த படத்தில் அஜித்தின் நடிப்பைப் போலவே நயன்தாராவின் பிகினி உடை மற்றும் நமீதாவின் கவர்ச்சியும் பரபரப்பாக பேசப்பட்டது. பழைய பில்லாவில் இடம்பெற்ற வெத்தலைய போட்டேண்டி, மைநேம் இஸ் பில்லா ஆகிய பாடல்களும் ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்றது.
இதையடுத்து பில்லா படத்தின் இரண்டாம் பாகம் பில்லா 2 என்ற பெயரில் தயாராகி வருகிறது. இதில் அஜீத் ஜோடியாக பார்வதி ஓமன குட்டன் நடிக்கிறார். சக்ரி டோலட்டி இயக்கும் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்து வருகிறது. சண்டைக்காட்சிகள் அங்கு படமாகி வருகின்றன. அஜித் பிறந்த நாளான மே 1ம்தேதி பில்லா 2 படத்தை ரிலீஸ் செய்யும் திட்டத்துடன் சூட்டிங்கை விறுவிறுப்பாக நடத்தி வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.