ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அஜித் நடிப்பில் வெளியான 'விவேகம்' படத்தை செங்கல்பட்டு ஏரியாவில் வெளியிட்ட நிறுவனம் 'வால்மார்ட் பிக்சர்ஸ்'. அப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததினால் சில கோடிகள் நஷ்டப்பட்ட இந்த நிறுவனம் அடுத்து, சுந்தர்.சி.இயக்கத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரெசா முதலானோர் நடித்துள்ள 'கலகலப்பு-2' படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறது.
குஷ்புவின் அவ்னி சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகிறது. 'கலகலப்பு' முதல் பாகம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்ததால் இரண்டம் பாகம் மீது மக்கள் மத்தியில் ஓரளவு எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. அதோடு தன்னுடைய கேரியரிலேயே முதல்முறையாக 'கலகலப்பு-2' படத்தை பிரம்மாண்டமான படமாக எடுத்திருக்கிறார்.
'கலகலப்பு-2' படத்திற்கு 'ஹிப் பாப் தமிழா' ஆதி இசை அமைத்துள்ளார். யு.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'கலகலப்பு-2' படத்தின் வியாபார விஷயங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் 'வால்மார்ட் பிக்சர்ஸ்' நிறுவனம் மிகப் பெரிய ஒரு தொகைக்கு 'கலகலப்பு-2' படத்தின் தமிழ்நாடு தியேட்டரிகல் ரைட்ஸை வாங்கியுள்ளது.