ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜெயம் ரவியின் ஆரம்பகால படங்களில் அநேக படங்கள் ரீ-மேக் ஆக தான் வந்தன. அதன் பிறகுதான் ரீமேக் படங்களில் நடிப்பதை நிறுத்தினார். இந்நிலையில் மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் நடிக்க இருக்கிறார் ஜெயம்ரவி.
வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கியவர் அஹமத். இவர் அடுத்து 'ஜெயம்' ரவியை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். அஹமத் அடுத்து இயக்கவுள்ள படம் அக்ஷயகுமார் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'பேபி' படத்தின் ரீ-மேக்.
இதற்கு முன் உதயநிதியை வைத்து அஹமத் இயக்கிய 'மனிதன்' படமும், ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற 'ஜாலி எல்.எல்.பி.' படத்தின் ரீ-மேக்தான். இந்த படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஹிந்தி ரைட்ஸ் வாங்கி இயக்குகிறார் அஹமத்.
இந்த படத்திற்கு 'பாகமதி' பட ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான மதி ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.