Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

100 படங்களில் 125 பாடகர்கள் அறிமுகம் : இமான் பெருமிதம்

23 ஜன, 2018 - 15:50 IST
எழுத்தின் அளவு:
Imman-introduce-125-singers-in-his-100-films

இசை அமைப்பாளர் இமான் இசை அமைத்துள்ள 100வது படம் டிக் டிக் டிக். 100 படங்களுக்கு இசை அமைத்திருப்பது குறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது 100 படங்களில் 125 பாடகர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்று பெருமை பொங்க குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:

இசையை பல மாஸ்டர்களிடம் முறையாக கற்றேன். கீபோர்ட் பிளேயராக வாழ்க்கையை தொடங்கினேன். 200க்கும் மேற்பட்ட விளம்பர படங்களுக்கு இசை அமைத்தேன். கிருஷ்ணதாஸி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி 100 தொடர்களுக்கு மேல் இசை அமைத்தேன். 2002ம் ஆண்டு காதலே சுவாசம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானேன். அந்தப் படம் வெளிவரவில்லை. தமிழ் எனது முதல் படமாக அமைந்தது. இப்போது டிக் டிக் டிக் 100வது படம்.

எனது இந்த இசை பயணத்தில் 125 பாடகர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதைத்தான் பெருமையாக நினைக்கிறேன். சின்ன படம், பெரிய படம், நல்ல படம் கெட்ட படம் என்ற பாகுபாடு இல்லாமல் பணியாற்றி இருக்கிறேன். லைப் ஆர்க்கெஸ்ட்ராவையே பயன்படுத்தி வருகிறேன். எனக்கு கீழ் 100 பேர் வேலை செய்கிறார்கள். யாருக்கும் ஒரு ரூபாய் சம்பள பாக்கி வைத்ததில்லை. நான் பாடுவதற்கு யாரிடமும் சம்பளம் வாங்கியதில்லை. இன்று 100 படங்கள், நாளை ஆயிரம் படங்கள் என்ற பேராசை கிடையாது. ஒவ்வொருவரும் தங்கள் கம்ப்யூட்டரில், லேப் டாப்பில், போனில் இமானுக்கென்று தனி போல்டர் உருவாக்க வேண்டும். அதில் காலத்தை வென்ற 100 பாடல்கள் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. என்றார்.

Advertisement
விபத்து வதந்தியில் சிக்கிய ஆதிவிபத்து வதந்தியில் சிக்கிய ஆதி கஜானாவை நோக்கி செல்லவில்லை : கமல் கஜானாவை நோக்கி செல்லவில்லை : கமல்


வாசகர் கருத்து (4)

sethu - madurai,இந்தியா
24 ஜன, 2018 - 10:13 Report Abuse
sethu muthal padam tamil illai
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
24 ஜன, 2018 - 06:01 Report Abuse
meenakshisundaram nee pattukku 'pattu'kku thuttu vangikeenu poiduve.unnai nambi ore paatu paadiyavan appuram saappattukku thaalam thane poduvaan?mudha paattuke kaasu koditheeyo ennavo?oru velai kaasu vaangikinu paada chance koduthiyo ennavo?
Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
23 ஜன, 2018 - 17:39 Report Abuse
ganapati sb நூறு படம் இசை அமைப்பது ஒரு சிறப்பான சாதனையே ஆஸ்கார் வாங்கிய ரஹ்மானே அவ்வளவு படம் இசை அமைத்திருக்க மாட்டார் என நினைக்கிறன் ஆனாலும் பெரிதாக ஈர்க்கும் அளவு மஹாதேவன் விசுவநாதன் இளையராஜா வித்யாசாகர் போல நீண்ட நாள் நினைவில் நிற்கும் அளவு பெயர் சொல்லும் அளவு பாடல் ஏதும் அமையவில்லை என்பது குறையே ஜோசப் விஜயை எல்லாம் கண்டாங்கி என பாடவைத்து பாடலின் தரத்தை குறைக்காதீர்கள்
Rate this:
23 ஜன, 2018 - 20:28Report Abuse
RathaRojaevaru karuthu solraram .venna muditu poda unna yaru kuppita...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film GajiniKanth
  • கஜினிகாந்த்
  • நடிகர் : ஆர்யா
  • நடிகை : சாயிஷா சைகல்
  • இயக்குனர் :சந்தோஷ் பி ஜெயக்குமார்
  Tamil New Film Junga
  • ஜூங்கா
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : சாயிஷா சைகல்
  • இயக்குனர் :கோகுல்
  Tamil New Film Tea Kadai Bench
  • டீ கடை பெஞ்ச்
  • நடிகர் : ராமகிருஷ்ணன்
  • நடிகை : தருஷி
  • இயக்குனர் :ராம் சேவா

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in