மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கபாலி படத்திற்கு பிறகு ரஜினி நடித்துள்ள படம் காலா. கபாலியை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கி உள்ளார். தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார், சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ரஜினியுடன் சமுத்திரகனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, வத்திக்குச்சி திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலரும் நடித்துள்ளனர்.
படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதன் டப்பிங் பணிகள் நாக் ஸ்டூடியோவில் தொடங்கியது. முக்கிய நடிகர், நடிகைகள் பேசி முடித்து விட்ட நிலையில் நேற்று முதல் ரஜினி தனது டப்பிங் பணியை தொடங்கினார். முன்னதாக நாக் ஸ்டூடியோவுக்கு வந்த ரஜினியை இயக்குனர் பா.ரஞ்சித், நாக் ஸ்டூடியோ மேலாளர் கல்யாணம் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் ரஜினி டப்பிங் பேசத் தொடங்கினார். 4 நாட்கள் ரஜினி டப்பிங் பேசுவார் என்று தெரிகிறது.