ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மியூசிக் சேனல் ஒன்றின் நிகழ்ச்சியில் அதன் தொகுப்பாளர்கள், சூர்யா படத்தில் அமிதாப் நடிக்க இருப்பதைப் பற்றிப் பேசும் ஒரு வீடியோ நேற்று வைரல் ஆனது. சூர்யா எப்படி அமிதாப்புடன் இணைந்து நடிப்பார், ஸ்டூல் மீது ஏறி நின்று நடிப்பாரா என நகைச்சுவையாகச் சொல்வதாகச் சொல்லிக் கொண்டு, கேவலமாகக் கமெண்ட் அடித்துள்ளனர்.
நகைச்சுவை என்ற பெயரில் பிரபலமான நடிகரான சூர்யாவின் உயரத்தைப் பற்றி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் அப்படி பேசியிருப்பதை திரைப் பிரபலங்கள் பலரும் கடுமையாகக் கண்டித்துள்ளனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர், நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் இது பற்றி கூறுகையில், “இது நகைச்சுவையா, கண்டிப்பாகக் கிடையாது. நகைச்சுவை என்ற பெயரில் பொறுப்பற்ற செயல், மொத்தத்தில் அறிவற்றது” என கடுமையாக, நேரிடையாக அது பற்றி விமர்சித்துள்ளார்.
உயரம், குண்டு, நிறம் ஆகியவற்றை வைத்து அடிக்கப்படும் நகைச்சுவைகளை இன்று பலரும் விமர்சித்து வரும் நிலையில் ஒரு பிரபலமான சேனல் ஒன்றில் தொகுப்பாளர்கள் பேசியிருப்பதற்கு ரசிகர்களும் அவர்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.