ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா 'ஸ்கெட்ச்' படத்தை 'கலைப்புலி' எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்த படம் வெற்றிப் படமாக அமைந்துள்ளதை தெரிவிக்கும்வகையில் சமீபத்தில் 'சக்சஸ் மீட்' நடத்தப்பட்டது.
அப்போது 'கலைப்புலி' எஸ்.தாணு பேசும்போது, 'விஜய் சந்தர் அடுத்து இயக்கவுள்ள படத்தையும் எங்களது நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும்'என்று அறிவித்து இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
'பொங்கலை முன்னிட்டு தமிழகமெங்கும் வெளியிடப்பட்ட 'ஸ்கெட்ச்' படம் எங்களுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இந்த படம் முதலில் இரண்டு தியேட்டர்களில் தான் திரையிடப்பட்டது. ஆனால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் மேலும் இரண்டு தியேட்டர்களில் 'ஸ்கெட்ச்' திரையிடப்பட்டுள்ளது.
மலேசியாவிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மலேசியாவில் மட்டும் இப்படம் 444 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. தெலுங்கில் 'ஸ்கெட்ச்'படம் வருகிற 26-ஆம் ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படம் தமிழில் கமர்ஷியலாக வெற்றிப் படமாக அமைந்துள்ளதை தொடர்ந்து ஹிந்தியில் ரீ-மேக் செய்து தயாரிக்கவும் பல பேர் தொடர்பு கொண்டுள்ளனர். அது சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது.” என்று ஸ்கெட்ச் வெற்றிப்படம் என்பதற்கான புள்ளி விவரங்களைப் போட்டுத்தாக்கினார்.
அதேசமயம், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களின் கருத்தோ இதற்கு நேர்மாறாக இருக்கிறது. அதாவது ஸ்கெட்ச் படத்தினால் நஷ்டம் வரும் என்கின்றனர்.
யார் சொல்வது உண்மை?