ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அமேசான் நிறுவனம் தற்போது வெப் சீரியல்களை தயாரித்து இணையளத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் இரண்டாவது வெப் சீரியல் ப்ரீத் (மூச்சு). வருகிற ஜனவரி 26ந் தேதி முதல் வெளிவருகிறது. இதில் நடிப்பது குறித்து மாதவன் நேற்று அளித்த பேட்டி வருமாறு:
நான் நடிக்கும் முதல் வெப் சீரியல் இது. என்னடா மாதவன் சீரியலில் நடிக்கிறாரே, மார்கெட் குறைந்துவிட்டதோ என்று நினைக்காதீர்கள். ஹாலிவுட்டில் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் கூட வெப் சீரியலில் நடிக்கிறார். வருங்காலத்தில் இதுதான் டிரண்ட். இங்குள்ள முன்னணி நடிகர்களும் நடிப்பார்கள். இதற்காக 6 வருடங்கள் ரிசர்ச் செய்து நடிக்கிறேன். அதற்காக சினிமா மாஸ் குறைந்து விடும் என்று நினைக்க வேண்டாம். டி.வி.வரும்போது சினிமா அழிந்து விடும் என்று நினைத்தோம். அழியவில்லை. அதுபோலத்தான் இப்போதும் அழியாது.
சினிமா பாதை வேறு, வெப் சீரியல் பாதை வேறு. டி.வி சீரியல் பாதை வேறு. ஒரு கதையை அதற்குரிய தளத்தில்தான் சொல்ல வேண்டும். வெப் சீரியலுக்கென இனி தனி கதைகள் உருவாகும். ப்ரீத் அப்படியான கதை. சைக்காலஜிக்கல் த்ரில்லர். அதற்குள் செண்டிமென்ட் ஆக்ஷ்ன், காமெடி எல்லாமே இருக்கும். என்றார்.
ரஜினி, கமல் அரசியல் வருகை குறித்து கேட்டபோது, தமிழ்நாட்டு நிர்வாகத்தில் இப்போது தேக்கம் இருக்கிறது. அதை சரிசெய்ய இருவரும் அரசியலுக்கு வருகிறார்கள். அதை நான் வரவேற்கிறேன். மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வர வேண்டும் என்பதில்லை. அரசியலுக்கு வராமலும் நல்லது செய்யலாம். நான் என்னால் முடிந்தவரை அதை செய்து கொண்டிருக்கிறேன் என்றார்.