ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராஜீவ் மேனனிடம் உதவியாளராக இருந்த அறிமுகமானவர் கௌதம் மேனன், 2001ஆம் ஆண்டு 'மின்னலே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்தப்படத்தில் கதாநாயகனாக மாதவன், அப்பாஸ் இருவரும் நடித்தனர். ரீமா சென் கதாநாயகியாக நடித்தார். அந்தப் படம் வெளிவந்து 17 வருடங்களாகிவிட்டன.
இந்நிலையில் மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடிக்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இப்படம் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் உருவாக இருப்பதாக தகவல்.
தன்னுடைய சம்பளத்துக்கு பதிலாக ஹிந்தி மற்றும் ஆங்கில ரைட்ஸை கொடுக்கும்படி மாதவன் கேட்டதாகவும், இதற்கு கௌதம் மேனன் ஒத்துக்கொள்ளவில்லை என்றும் அதனால் பேச்சுவார்த்தையில் இழுபறியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கௌதம் மேனனை அப்செட்டாக்கியுள்ளாராம்.
சற்குணம் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படமொன்றில் நடித்து வரும் மாதவன், தற்போதைய பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தால் சற்குணம் படத்தை முடித்துவிட்டு கௌதம் மேனன் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.