ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கபாலியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் காலா. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் படம் ரிலீசுக்கு தயாராகி விடும்.
மேலும், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.ஓ ஜனவரி 26-ந் தேதி வெளியாக இருந்ததால், ஏப்ரல் மாதம் காலாவை வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் 2.ஓ படத்தின் இறுதிகட்ட பணிகள் தாமதமானதால் ரிலீஸ் தேதியை ஏப்ரலுக்கு தள்ளி வைத்து விட்டனர்.
அதன்காரணமாக ரஜினியின் காலா பட ரிலீஸ் ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த தகவலை சென்னையில் ரசிகர்களை சந்தித்தபோது ரஜினியும் உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், காலா வெளியீடு குறித்து அப்பட டைரக்டர் பா.ரஞ்சித் கூறுகையில், 2.ஓ படம் வெளியான இரண்டாவது மாதத்தில் காலா திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும், 2.ஓ படம் திரைக்கு வந்த பிறகுதான் எந்த மாதம், எந்த தேதியில் காலா திரைக்கு வரும் என்பதை உறுதி செய்யப்படும். இப்போதைக்கு காலா ரிலீஸ் குறித்து திட்டவட்டமான முடிவு சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.