மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் முதன்முதலாக இணைந்து நடித்துள்ள படம் - 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்'. இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்ட நிலையில் பட பணிகள் முடிவடையாததினால் பிப்ரவரியில் இப்படத்தை வெளியிட உள்ளனர்.
இந்நிலையில் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வெளியான படங்கள் வர்த்தக அளவில் வெற்றி பெற்றதையடுத்து இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமம் பெரிய விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது.
இந்த படத்தில் விஜய்சேதுபதி பழங்குடி இன மக்களின் தலைவனாக நடிக்கிறார். தவிர முற்றிலும் மாறுபட்ட 7 கெட்-அப்களில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். நடிகர் சிரஞ்சீவியின் உறவினர் நிகரிகா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஜஸ்டின் பிரபாகர் இசை அமைத்துள்ளார்.