ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் 'மதுரவீரன்'. ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கத்தில், விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள படம் இது. சென்னையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது. அந்த போராட்டம் நடந்து ஒரு வருடமாகிவிட்ட நிலையில் இந்த ஆண்டு மதுரவீரன் படத்தை ஜனவரி 12-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டனர். ஆனால் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விக்ரமின் ஸ்கெட்ச் மற்றும் பிரபுதேவாவின் குலேபகாவலி போன்ற படங்கள் களமிறங்கியதால் மதுர வீரனுக்கு போதிய தியேட்டர் கிடைக்கவில்லை. இதனால் படம் தள்ளி போகிறது என்று ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படி, மதுர வீரன் படம் பொங்கல் முடிந்த மறுவாரம், அதாவது ஜன., 19-ம் தேதி ரிலீஸாக உள்ளது.